Skip to content

வரும் ஆண்டில் 40 ஆயிரம் அரசு காலி பணியிடம் நிரப்பப்படும்

தமிழக பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

மூத்த குடிமக்களின் முழுமையான பராமரிப்பிற்கென, மதுரை..கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி,வேலூர், தஞ்சாவூர்மற்றும்திண்டுக்கல் உள்ளிட்டமாநகராட்சிகளில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில்,25 அன்புச்சோலை’ மையங்கள் அமைக்கப்படும். இந்தப்பகல்நேரப் பாதுகாப்பு மையங்களில் முதியவர்கள் தோழமைஉணர்வுடனும் பயனுள்ள பணிகளிலும் ஈடுபடலாம். பகல்நேரப்பராமரிப்பு உதவி, அத்தியாவசிய மருத்துவப் பராமரிப்புக்கானஏற்பாடுகள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உள்ளிட்டபல்வேறு சேவைகளை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின்துணையுடன் இந்த அன்புச்சோலைகள் வழங்கும்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்-வாயிலாக, தமிழ்நாட்டிலுள்ள 30,992 அரசுப் பள்ளிகளிலும்,. ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள 3,995 அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை
17.53லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர் மாணவர்களின் வருகை உயர்ந்துள்ளதோடு, அவர்களின் ஊட்டச்சத்தும் கற்றல் திறனும் மேம்பட்டுள்ளது என்று ஆய்வுகள் நாட்டிலேயே முதல் முறையாக தெரிவிக்கின்றன. அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம், தமிழ்நாட்டின் நகரப் பகுதிகளில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மேலும் 3.14 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், வரும் கல்வியாண்டு முதல் மேலும் விரிவுபடுத்தப்படும்.. இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்காக வரும் நிதியாண்டில் 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகள் நல மையங்களில் அடிப்படை வசதிகளை உறுதி செய்திடும் வகையில், வரும் நிதியாண்டில் சுமார் 83 கோடி ரூபாய் செலவில் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் 500 குழந்தைகள் நல மையங்களுக்குப் புதிய கட்டடங்கள் கட்டப்படும். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்காக வரும் நிதியாண்டில் 3,676 கோடி
ஒதுக்கப்படும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு 8,597 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும் தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் பெயரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2025-26 ஆம் ஆண்டில் அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிடும் பொருட்டு 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

 

கடந்த இரண்டு ஆண்டுகளில், 780 அரசுப் பள்ளி மாணவர்கள் இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களான இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT), தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (NLU) உள்ளிட்ட, நாட்டின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சிறப்பிடம் பெற்று சேர்க்கை பெற்றுள்ளனர். மேலும், 12 மாணவர்கள் முழுக் கல்வி உதவித்தொகையுடன் வெளிநாட்ல் பயின்று  வருகின்றனர்.

இனி ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய அளவில் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து சிகரம் தொடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கென 50 கோடி ரூபாய் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (Samagra Shiksha) கீழ், பல்வேறு மாணவர் நலன் சார்ந்த திட்டங்களை கடந்த 7 ஆண்டுகளாக மாநில அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, மாணவர்களின் அடிப்படைக் கல்வியறிவை உறுதிசெய்யும் எண்ணும் எழுத்தும் திட்டம்’, மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான சிறப்புக்

அரசு துறைகளில்  காலியாக உள்ள 40 ஆயிரம் பணியிடங்கள் வரும்  நிதி ஆண்டில் நிரப்பப்படும்.

 

error: Content is protected !!