தமிழக பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலை 6 மாத டிப்ளமோ படிப்பிற்காக லண்டன் செல்கிறார். ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் லண்டன் செல்லும் அவர் வருவதற்கு 6 மாத காலம் ஆகும் என்பதால் தமிழக பாஜகவிற்கு பொறுப்பு தலைவர் ஒருவரை நியமிக்க கட்சி மேலிடம் நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக மூத்த தலைவர்களிடம் மோடி, அமித்ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பொறுப்பு தலைவராக பாஜவின் தமிழக, சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு அடுத்தமாதம் அண்ணாமலை வெளிநாடு சென்றதும், வெளியாகும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பாஜக மேலிடம் வரும் 2026 தேர்தலில் அதிமுக உள்ளடக்கிய கூட்டணி ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ள நிலையில் நயினார் நியமிக்கப்பட்டால் அதற்கான வேலைகள் ஆரம்பிக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. மேலும் இதன் தொடர்ச்சியாக தமிழக அரசியலில் புதிய மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜ மாநில பொறுப்பு தலைவராகிறார் நயினார்…?
- by Authour
