அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மகன் திருமணம் நேற்று கோவையில் நடந்தது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் முருகன், முன்னாள் கவர்னர் தமிழிசை மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருமணத்திற்கு வந்திருந்த அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மிகவும் அன்புடனும், பவ்யத்துடனும் வரவேற்றனர். அண்ணாமலையிடம் பேசுவது,
பிரதமரிடம் பேசுவது போல பாவித்து மாஜி அமைச்சர்கள் நடந்து கொண்ட விதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக மையக்குழு ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது.
இதில் வரும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்படும்என கூறப்படுகிறது. திருமண விழாவில் கிடைத்த சில அறிகுறிகள் மூலம் கிடைத்த தகவல்களை பகிர்ந்து கொள்ள இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.