பாஜக சார்பில் என் மண், என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மோடி பங்கேற்க இருக்கும் பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்க இருப்பதாக பாஜகவினர் கூறி வருகிறார்கள். மேலும் பாஜகவில் பிற கட்சிகளை சேர்ந்தவ பல முக்கிய பிரமுகர்கள் இணைய இருப்பதாகவும் பாஜகவினர் கூறினர். மாநிலத்தலைவர் அண்ணாமலை அடுத்த 2 நாட்களில் கோவையில் அடுத்த விக்கெட் என நிருபர்களிடம் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். இதனைத்தொடர்ந்து பாஜகவினர் சமூகவலைதளங்களில் 26ம் தேதி மாலை பாருங்கள் என பரபரப்பை ஏற்படுத்த முதலில் அதிமுக பிரமுகர் என கூற வேலுமணி போகப்போகிறார் தகவல் வெளியானது. நிருபர்கள் வேலுமணி ஆட்களை தொடர்பு கொள்ள அண்ணன் சேலத்தில் எடப்பாடியாரை சந்திக்க சென்று இருக்கிறார் எங்கள் பக்கம் வாய்ப்பே என கூற அடுத்ததாக செ.மா வேலுசாமி, எம் ஆர் விஜயபாஸ்கர் என பலரும் பல்வேறு தகவல்களை கூற நிருபர்கள் அவர்களை தேட ஆரம்பித்தனர். அதற்குள்ளாக சிலர் கார்த்திக் சிதம்பரம் என கிளப்பி விட கார்த்திக் சிதம்பரம் எங்கே? என போனை போட ஆரம்பித்தனர் நிருபர்கள்.. இப்படியாக காலையில் ஆரம்பித்து மாலை வரை கோவை நிருபர்கள் பரபரப்பாகவே காணப்பட்டனர். மாலை 5 மணிக்கே பாஜகவினர் பிரஸ்மீட் நடக்கப்போவதாக கூறிய ஒட்டலில் நிருபர்கள் கூட்டம் வர ஆரம்பித்தது. ஆனால் மாலை 6.40 மணி வரை பாஜகவினர் யாரும் அங்கு வரவில்லை. அதன் பின்னர், கட்சியின் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் வந்தனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவில்லை. முதலில் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பேசும்போது, “கோவையில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கால அவகாசம், பாதுகாப்பு தேவைப்பட்டதால், அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது” என்றார். பின்னர், இணையமைச்சர் எல்.முருகன் பேசும்போது, “பிரதமர் மோடியின் இரண்டு நாள் பயணம் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மாற்றுக் கட்சியினர் இணையும் விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சியில் இருந்தும் பாஜகவுக்கு வர தயாராக உள்ளனர்” என்றார். பாஜகவில் முக்கிய புள்ளிகள் இணைய போகிறார்கள் என்று பில்டப் மேல் பில்டப் கொடுத்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாஜக.. கடைசியில் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதாக கூறியது பாஜகவினருக்கே ஏமாற்றத்தை கொடுத்தது..
’கோவையில் சேரப்போகுற ஆள்’… பில்டப் மேல பில்டப் கொடுத்து ஏமாற்றிய பாஜக…
- by Authour