தமிழக சட்டமன்றத்தின் 2ம் நாள் கூட்டம் இன்று காலை 9. 30 மணிக்கு தொடங்கியது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வந்திருந்தனர். எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி இன்று காய்ச்சல் காரணமாக சபைக்கு வரவில்லை. அதிமுகவினர் இன்றும் பேட்ச் அணிந்து வந்திருந்தனர்.
சபை நடவடிக்கைகள் தொடங்கியதும், சபாநாயகர் அப்பாவு மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஈரோடு கிழக்கு எம். எல்.ஏ. இளங்கோவன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார். அதைத்தொடர்ந்து அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து இன்றைய சபை நடவடிக்கைகளை ஒத்திவைக்கப்பட்டன. மீண்டும் நாளை சபை நடவடிக்கைகள் தொடங்கும்.