Skip to content

தமிழகத்தில் 72 காவல் நிலையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது ….முதல்வர் ஸ்டாலின்…

72 காவல் நிலையம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 23 தீயணைப்பு நிலையங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் மீதான மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன்  மறைவிற்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல் நிலையம் வேண்டும், தீயணைப்பு நிலையம் வேண்டும் என்று பல உறுப்பினர்கள் கோரிய நிலையில் 72 காவல் நிலையம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 23 தீயணைப்பு நிலையங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஆவுடையார்கோவிலில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்த நிலையில், ரூ.2.59 கோடியில் ஆவுடையார்கோவிலில் தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணி மே மாதம் பணிகள் தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தீயணைப்பு நிலைய கட்டடம் திறக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
error: Content is protected !!