நாடு முழுவதும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். வாக்காளர் பட்டியாலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும், இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளதாகவும், இதில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் கூறினார். தமிழ்நாட்டில் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும் சத்யபிரதா சாகு கூறினார். தமிழ்நாட்டில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் எனவும் தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் 3.10 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.