கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் வாழ்வாதார கோரிக்கை பேரணி லைட் ஹவுஸ் கார்னரில் இருந்து கரூர் வட்டாட்சியர் அலுவலகம் வரை இப்பேரணியானது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை ஒழித்திடும் அரசாணை 152,139 ஜ ரத்து செய்திட வேண்டும், தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்திட வேண்டும், இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை 155 ரத்து செய்திட வேண்டும் என 8 கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.
இந்த கோரிக்கை பேரணி ஆர்ப்பாட்டத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் வரும் (28.03.2023) ஆம் தேதி அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறத்தம் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றிடத் தவறும் பட்சத்தில் பட்ஜெட் கூட்டத் துறையின் போது கோட்டை முற்றுகையிடும் ஒன்றுபட்ட போராட்டம் நடைபெறும் தெரிவித்தனர்.