அரியலூர் ஒற்றுமை திடலில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் “ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். கண்காட்சியில் கடந்த ஓராண்டில் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள், சாதனைகள், அதில் மக்களின் பங்கு, மக்களின் முன்னேற்றம், சுய உதவி குழு பெண்களின் வாழ்வாதார முன்னேற்றம், தொழில் துறையில் முன்னோடி மாநிலம், விவசாயத்தில் முதன்மை மாநிலம் என்பதை விளக்குகின்ற வகையில் பல்வேறு அரிய தகவல்கள் அடங்கிய புகைப்பட கண்காட்சி இடம் பெற்றுள்ளது. மற்றும் இதனை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும்,
கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ரமேஷ் சந்த் மீனா , மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி சட்டமன்ற உறுப்பினர்கள் கு. சின்னப்பா க.சசொ.க. கண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கண்காட்சி தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும். கண்காட்சியை பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் காண மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.