தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.