முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு….
கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கீடு
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு
வனத்துறை அமைச்சராக இருற்த ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு
சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கீடு
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் ஒதுக்கீடு
சி.வி.மெய்யநாதனுக்கு சூற்றுச்சூழல்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாடு இலாகா ஒதுக்கீடு
அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு, அமைச்சர் முத்துசாமி வசம் இருந்த சிஎம்டிஏ துறை கூடுதலாக ஒதுக்கீடு
விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு துறை ஒதுக்கீடு
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு, அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை கூடுதலாக ஒதுக்கீடு
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் ஒதுக்கீடு.