Skip to content

நாதக ஒருங்கிணைப்பாளராக ஐல்லிக்கட்டு ராஜேஷ் நியமனம்…

  • by Authour

தமிழர் வீர விளையாட்டு மீட்புக்கழக மாநில தலைவராக இருப்பவர்   திருச்சி ராஜேஷ், நாம் தமிழர் கட்சியினர்  மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.  இது போல  திருவெறும்பூர்  சோழ சூரனும்,  ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக  நாதக  தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் விடுத்துள்ள  அறிக்கையில் கூறி இருப்பதாவது:

திருச்சி மேற்கு தொகுதி, 73 வது வாக்ககத்தைச் சேர்ந்த து.ராஜேஷ், ( தமிழா் வீரவிளையாட்டு  மீட்புக்கழக மாநில தலைவர்) திருவெறும்பூர் தொகுதி, 129 வது வாக்ககத்தைச் சேர்ந்த வெ.சோழசூரன் ஆகியோர் நாம் தமிழர் கட்சி – மாநில
ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், அன்பு
உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.
பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச்
செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு! சீமான் என  அதில் கூறி உள்ளார்.

error: Content is protected !!