திருச்சி தமிழன் டிவி காமிராமேன் விக்னேஷ்வரன்(39), இவர் செங்குளம் காலனியில் வசித்து வந்தார். சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை அவர் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர், விவேக் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினார். உடனடியாக அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இன்று மாலை இறுதிச்சடங்கு நடக்கிறது. விவேக் திருமணம் செய்து கொள்ளவில்லை, தாயாருடன் வசித்து வந்தார். விக்னேஷ்வரனை இழந்து வாடும் அவரது தாயார், மற்றும் உறவினர்களுக்கு திருச்சி பத்திரிகையாளர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
தமிழன் டிவி காமிராமேன் காலமானார்….திருச்சி பத்திரிகையாளர் சங்கம் இரங்கல்..
- by Authour
