திருச்சி மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், தமிழ் ஆட்சிமொழி வாரம் இன்று (21ம் தேதி) தொடங்கி ஒருவார காலம் நடைபெற உள்ளது.
அதன் ஒரு பகுதியாக காந்தி சந்தை காவல் நிலையம் அருகில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அரசு வாகனங்களில் ஆட்சிமொழி விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி, துண்டு பிரசுரத்தை வணிக நிறுவனங்களுக்கு வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் திருச்சி துணை இயக்குநர் பொ.ராசேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.