தமிழ் வளர்ச்சியை முன்னெடுக்கும் ஜெர்மனி ஹாம்பர்க் பல்கலைக் கழகத்திற்கு, மத்திய அரசு நிதி வழங்கவேண்டும் என உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் மு. ஞானமூர்த்தி மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஜெர்மனியில் சுமார் 100 கோடி ரூபாய் செலவில், தமிழெக்ஸ் என்னும் தமிழ் மொழிக்கான மின்னிலக்க (டிஜிட்டல்) பேரகராதியை உருவாக்கும் பணியில் ஈவா வில்டன் தலைமையிலான ஹாம்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு ஈடுபட்டு வருகிறது.
இதனால் உலகில் தமிழ் மேலும் மெருகேற்றப்பட்டு உலக நாடுகளில் பிறமொழி பேசும் மக்களும் தமிழைக் கற்க முன்வருவார்கள். தமிழில் உள்ள இலக்கியங்கள் பிறமொழி பேசும் மக்களிடம் சென்றடையும் எளிய முறையை ஜெர்மனி ஹாம்பர்க் பல்கலைக் கழக ஆராய்ச்சி குழு ஈடுபட்டு வருகிறது. தமிழ் மொழி வளர்ச்சிக்கானஅடுத்தகட்ட முயற்சிக்கு முன்னெடுக்கும் ஈவா வில்டன் தலைமையிலான குழுவினரை உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் வாழ்த்துகிறேன். வரவேற்கிறேன்.
ஜெர்மனி தமிழறிஞர்களின் முயற்சி வெற்றிபெற மத்திய அரசு கூடுதல் நிதியை வழங்கி உலகளாவிய தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது போல தமிழக அரசும் இந்த குழுவுக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் மு. ஞானமூர்த்தி தெரிவித்துள்ளார்.