தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (8.8.2023) முகாம் அலுவலகத்தில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் தமிழ் முனைவர் பட்ட ஆய்வாளர் . த.க. தமிழ்பாரதன் அவர்கள் சந்தித்து, இத்தாலியின் வெனீசு நகரத்தில் நடைபெற்ற கிரேக்க மொழிக் கருத்தரங்கிற்கு சென்றபோது, அதன் அருகிலுள்ள சான் லாசரோ தீவில் தமிழ் ஓலைச்சுவடிகள் இருப்பதைக் கண்டறிந்து, அதுகுறித்த அறிக்கையை வழங்கினார். இச்சந்திப்பின்போது, அண்மையில் அவரது தமிழாக்கத்தில் வெளியான அரிஸ்டாட்டிலின் இயற்பியல் நூலையும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கினார்.