வசந்த காலத்தின் தொடக்கமான சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கிராம பகுதிகளில் விவசாயிகள் நல்லேர் பூட்டி உழவு பணிகளை தொடங்குவது வழக்கம். புதிய ஆண்டில் விவசாயம் தழைக்க வேண்டும், ஆடு, மாடுகளுக்கு தீவனம் கிடைக்க வேண்டும், உணவு பொருள் உற்பத்தி அதிகரித்து பசி, பட்டினி இல்லாத நிலை தொடர வேண்டும்
என்ற நோக்கத்துடன் இந்த நல்லேர் பூட்டும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன்படி தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரத்தில் நல்லேர் பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விவசாயிகள் கொண்டு வந்த கலப்பை, மண்வெட்டி, அரிவாள் உள்ளிட்ட உபகரணங்களை சாமி முன்பு வைத்து வழிபாடு செய்து விவசாயிகள் தங்கள் கால்நடைகளை கொண்டு வயல்வெளியில் நல்லேர் பூட்டினர்.