தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை கொளத்தூர் தொகுதியில் நலத்தி்ட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:கொளத்தூர் வரும்போது எனக்கு ஒரு உற்சாகம் வருகிறது. புது எனர்ஜி வருகிறது. ஆளுங்கட்சி தொகுதி எதிர்க்கட்சி தொகுதி என்று நாங்கள் பார்ப்பதில்லை. எந்த வெறுப்பும் இல்லாமல் எதிர்க்கட்சி தொகுதிகளுக்கும் திட்டங்கள் நிறைவேற்றுகிறோம்.234 தொகுதிகளும் எனது தொகுதிகள் தான். கொளத்தூர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். கொளத்தூர் தொகுதி்யில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் கட்டப்படுகிறது.
படிப்பு, படிப்பு, படிப்பு….. இதுமட்டும் தான் மாணவர்களிடம் இருக்க வேண்டும். அறநிலையத்துறை, அறிவுத்துறையாகவும் செயல்படுகிறது. 1400க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு குட முழுக்கு விழா நடந்துள்ளது. ரூ.5 ஆயிரம் கோடி கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. அறநி்லையத்துறை சார்பில் 10 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 9ம் தேதி கோவையில் தமிழ் புதல்வன் திட்டம் ( அரசு கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்) தொடங்கப்படும். நானே அந்த விழாவில் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.