தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று அதிகாலை முதல் சிறப்பு அபிசேகங்கள் நடந்தது. தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார் திரு மேனிக்கு விபூதி, மஞ்சள், திரவியம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பால், தயிர், சந்தனம் உள்பட பல வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
மங்கள வாத்யங்கள் இசைக்க, சிவச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத, ஒதுவார்கள் திருமுறை பாட சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களை, சேர்ந்த பக்தர்கள் புத்தாடை உடுத்தி குடும்பத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்து இருந்து பெருவுடையாரை வழிப்பட்டனர்.
இதுபோல அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.