Skip to content
Home » கரூரில் தமிழக வெற்றிக் கழக கொடியேற்று விழா…ரத்ததான முகாம்…

கரூரில் தமிழக வெற்றிக் கழக கொடியேற்று விழா…ரத்ததான முகாம்…

கரூரில் தமிழக வெற்றிக் கழக கொடியேற்று விழா, உறுப்பினர் சேர்க்கை மற்றும் ரத்ததான முகாம் நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்பு – 2026ல் விஜயை முதல்வர் நாற்காலியில் அமர வைக்கும் முனைப்புடன் செயல்படுவதாக தெரிவித்தனர்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு காந்திகிராமம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் பால்ராஜ் என்பவர் ஏற்பாட்டில் கட்சி கொடி ஏற்ற விழா உறுப்பினர் சேர்க்கை மற்றும் ரத்ததான முகாம் இன்று நடைபெற்றது.

முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் மதியழகன் தலைமை ஏற்று சுமார் 30 அடி உயர கட்சி கொடி கம்பத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை ஏற்றி வைத்து உறுப்பினர்களுக்கு இனிப்பு வழங்கினார் தொடர்ந்து சுமார் 70-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக

இணைத்துக் கொண்டனர் அவர்களுக்கு மாவட்ட தலைவர் மதியழகன் கட்சி துண்டு போட்டு வரவேற்றார் அதனை தொடர்ந்து நடைபெற்ற ரத்ததான முகாமில் சுமார் ஆண்கள் பெண்கள் உட்பட 50 பேர் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்யில் கட்சியின் முதல் மாநில மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று 1 மாதம் நிறைவடைந்தது ஒட்டி, இன்று கட்சி கொடியேற்று விழா, உறுப்பினர் சேர்க்கை மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது. தமிழக வெற்றி கழகம் சார்பில் கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் உறுப்பினர் சேர்க்கை முகாமில் ஏராளமான இளைஞர்களும், இளம் பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்று கட்சியில் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டு வருகின்றனர். 2026 சட்டமன்ற தேர்தலில் தலைவர் தளபதி விஜயை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைக்கும் முனைப்போடு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *