கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலம் தழுவிய மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் இராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலனில் அக்கறை கொண்டு தமிழ்நாடு அரசு அமல்படுத்தி வரும் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை (NHIS) செயல்படுத்த தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கட்டணம் இல்லா சிகிச்சை வழங்கப்பட வேண்டும், தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் IFHRMS முறையில் தாமதமாகவே மாதம்தோறும் வருமான வரி பிடித்தம் செய்யும் முறையை கைவிட்டு, பழைய நடைமுறைப்படி ஆசிரியர்களின் விருப்பப்படி வருமான வரி செலுத்திட அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.