கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு தான்தோன்றி மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது
நேற்று நடுநிலை பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டம் கா.பரமத்தி சாலப்பாளையம் அரசுப் பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடம் மறைக்கப்பட்டு கலந்தாய்வு நடைபெற்றது.
இதற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மறைக்கப்பட்ட காலிப் பணியிடத்தை காட்டி கலந்தாய்வு நடத்த வேண்டும். கரூர் மாவட்டத்தில் வெளிப்படையாக கலந்தாய்வு நடைபெறுவதற்கு தமிழக முதல்வர் தலையிட்டு வெளிப்படையான நேர்மையான அனைத்து காலி பணியிடங்களை காட்டி கலந்தாய்வு நடத்த வேண்டும் என கோரி காத்திருப்பு போராட்டத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஈடுபட்டனர்.
இதனால் கலந்தாய்வு மதியம் சுமார் 2 மணி அளவில் நிறுத்தப்பட்டது இதனை அடுத்து இரவு சுமார் 7 மணி வரை கலந்தாய்வு நடைபெறாததால் ஆசிரியர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர் ராமநாதன்செட்டியிடம் முறையிடப்பட்டது. அவர் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து தர்ணா போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டு கலந்தாய்வு நடைபெற்றது.
ஆசிரியர்களின் சுமார் 5 மணி நேர போராட்டம் காரணமாக கலந்தாய்வுக்கு வந்த ஆசிரியர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.