இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு இன்னொரு ரிட் மனுவையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், தமிழக பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் நியமனங்களில் யுஜிசி தலைவரையும் சேர்க்க வலியுறுத்துகிறார் ஆளுநர் ரவி என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜனவரி மாதம் 17-ந் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி பார்திவாலா பெஞ்ச், இந்த விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்; அல்லது கோர்ட் தீர்த்து வைக்கும் என தெரிவித்திருந்தது. இதனையடுத்து கடந்த வாரம் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. அப்போது இவ்வழக்கு பிப்ரவரி 4ம் தேதி விசாரிக்கப்படும் என ஒத்திவைக்கப்பட்டது.அதன்படி இன்று மாலை 3 மணிக்குஇந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்ட வாதம் வருமாறு:
தமிழ்நாடு அரசு: 12 மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பினார். 2 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி விட்டார். திருப்பிய அனுப்பிய மசோதாக்கள் மீண்டும் அவையில் நிறை வேற்றினால் கவர்னர் ஒப்புதல் தர வேண்டும். துணைவேந்தர் நியமனத்தில் கவர்னர் பழிவாங்குகிறார். அரசியல் சாசன விதிப்படி கவர்னர் நடப்பதில்லை. கவர்னர் அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்டவர் தான். துணைவேந்தர் நியமிக்கப்படாததால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்தார். உச்சநீதிமன்றம் கண்டித்த பிறகு தான் அமைச்சருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். அரசியல் சாசன விதி 200ன் படி கவர்னர் செயல்பட உத்தரவிட வேண்டும். அரசியல் சாசனத்தை கேலி கூத்தாக ஆக்குகிறார்.
இதைக்கேட்ட நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:
கவர்னர்- தமிழக அரசு மோதலால் மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். கவர்னரின் செயலால் தமிழ்நாடு அரசும், மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசு அனுப்பிய 10 மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பி இருக்க கூடாது. இந்த விஷயத்தில் அரசும், மக்களும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
மத்திய அரசு: மசோதா குறித்து முன்பே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தற்போது மசோதாக்கள் நிலுவையில் இல்லை.
இவ்வாறு தொடர்ந்து விவாதம் நடந்தது. நாளை மறுநாள் மத்திய அரசின் வழக்கறிஞர் வாதம் நடைபெறும்.