Skip to content

தமிழக வெற்றி கழகத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் ஆதரவு!

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அக்கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை அறிவித்தார். இதனை தொடர்ந்து விஜய் கட்சி பணிகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மும்முரமாக கவனித்து வருகிறார். மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தீவிரமாக கட்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிவித்துள்ளார். தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.  2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழக கூட்டணியில் இணையும் எனவும் முஸ்தபா அறிவித்தார்.

error: Content is protected !!