Skip to content

தமிழ்நாட்டில் எம்.பி. சீட் குறையாது- கோவையில் அமித்ஷா பேச்சு

  • by Authour

கோவை பீளமேட்டில் இன்று (புதன்கிழமை) காலை பா.ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.  இதில்  பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று இரவு 8.30 மணி அளவில் டில்லியில் இருந்து தனி விமானத்தில் கோவை வந்தார்.

இன்று காலை கோவை பீளமேடு பகுதியில் கட்டப்பட்டு உள்ள பா.ஜ.க வின் புதிய மாநகர அலுவலகத்தை  அமித்ஷா திறந்து வைத்தார். அங்கு பா.ஜ.க நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினார்.  பின்னர் கோவை நிகழ்ச்சியில்  உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:

“தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டில் ஒரு எம்.பி. சீட் கூட  குறையாது. விகிதாச்சார அடிப்படையிலேயே தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும்.தென்னிந்திய மக்களுக்கு கூடுதல் தொகுதி தான் கிடைக்கும், தொகுதி குறைய வாய்ப்பு இல்லை. நான் இங்கு உண்மையை கூறி உள்ளேன், நீங்கள் கட்டாயம் எனக்கு பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.  இன்று இரவு  கோவை ஈஷா மையத்தில் நடைபெறம்  மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்கும்  அமித்ஷா நாளை காலை கோவை வந்து தனி விமானம் மூலம் டில்லி திரும்புகிறார்.

 

error: Content is protected !!