திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் எம்.எல்.ஏ. எஸ். ஆர் ராஜா தலைமையில் இன்று திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு பணிகள் மேற்கொள்கிறார்கள். காலை 10 மணிக்கு மணப்பாறை அருகே உள்ள மொண்டிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு காகித ஆலை வளாகம் சென்றனர். அங்கு நடைபெறும் பணிகள் குறித்து குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து கண்ணுடையான்பட்டி சிப்காட் வளாகத்திலும், பின்னர் பஞ்சப்பூர், பின்னர் கொட்டப்பட்டு பால்பண்ணை, நவல்பட்டு நவல்பட்டு ஐடி பார்க், மதியம் வரகனேரி வேர் ஹவுஸ் ஆகிய இடங்களில் ஆய்வு செய்கிறார்கள்.
மாலை 3 மணிக்கு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்துகிறார்கள்.
.