தமிழ்நாடு பட்ஜெட் குறித்து நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் கூறியதாவது:
தேசிய பணவீக்கத்தை விட தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. நிதி பற்றாக்குறை 3.5% ஆக இருக்க வேண்டும்; அந்த வரம்பிற்குள் தமிழ்நாடு அரசு உள்ளது. மத்திய அரசிடம் இருந்து வரும் நிதிப்பகிர்வு, மானியம் குறைந்துகொண்டே வருகிறது. தமிழ்நாட்டின் பொருளாதார நிலை ஆரோக்கியமாக உள்ளது. தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் ரூ.1,95,17 கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பத்திரப் பதிவு துறையில் கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு வரி வருவாய் கிடைக்கவில்லை. 2 பேரிடர்களுக்கான நிதியும் அரசின் வரி வருவாயில் இருந்து செலவிடப்பட்டது. 10வது நிதிக் குழுவில் 6.64சதவீதமாக நிதிப்பகிர்வு 15வது நிதிக்குழுவில் 4.08% குறைந்து விட்டது. 2024-25 நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 3.44 சதவீதமாக இருக்கும் .
இவ்வாறு உதய சந்திரன் கூறினார்.