தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டாக்டர். உ.வே.சாமிநாத ஐயரை கவுரவிக்கு விதமாக அவரது பிறந்தநாள் (பிப்ரவரி 19) தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதிமுக உறுப்பினர் கே.பி. முனுசாமி கேள்வி எழுப்பியதை அடுத்து இந்த அறிவிப்பை முதல்-அமைச்சர் வெளியிட்டார்.
தமிழ் தாத்தா என அழைக்கப்படும் உ.வே.சாமிநாதர் பிறந்தநாள் பிப்ரவரி 19-ம் தேதி கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.