திருச்சி இந்து தமிழ் திசை நாளிதழின் திருச்சி பதிப்பு தலைமை நிருபராக பணியாற்றியவர் கல்யாணசுந்தரம் எனும் கல்யாணம்(50) சமீபத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக வீட்டில் ஒய்வுபெற்று வந்தார். நேற்று இரவு வேங்கூரில் உள்ள தனது வீட்டில் நெஞ்சுவலி காரணமாக மயங்கி விழுந்த கல்யாணத்தை குடும்பத்தினர் காட்டூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பு காரணமாக கல்யாணசுந்திரம் இறந்து விட்டதாக கூறினர். இதனையடுத்து குடும்பத்தினர் கல்யாணசுந்தரத்தின் உடலை சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு எடுத்து சென்றனர். இன்று அவரது இறுதி சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் கல்யாணசுந்தரத்தின் மறைவிற்கு திருச்சி பத்திரிக்கையாளர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
திருச்சி தமிழ் இந்து தலைமை நிருபர் கல்யாணசுந்தரம் காலமானார்…
- by Authour
