தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க கோரி வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் நடத்துவதை ஆதரித்து இன்று புதுக்கோட்டை மாவட்ட அனைத்து நீதிமன்றம் முழு புறக்கணிப்பு நடைபெற்றது. இன்று புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கம், மற்றும் நீதி மன்ற வாயிலில் தமிழை உயர்நீதிமன்றம் மொழியாக ஆக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர்கள் காசி. சிற்றரசு, ஆதி மூலம், அருள்மொழி வேந்தன்,பரமசிவம், சங்கர், பர்வின் பானு, திலிபன் ராஜா, ஜி.முத்துவேல்.ராமச்சந்திரன், மதியழகன், பழனிச்சாமி, அன்னவாசல் சிவகுமார், உள்ளிட்ட திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர் கோஷங்கள் எழுப்பினர்