Skip to content

ரஜினி பட நடிகை 44 வயதில் திருமணம்….

  • by Authour

தமிழ் சினிமாவில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள நடிகை லாவண்யா. இவர் தன்னுடைய 44 வயதில் பிரசன்னா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் ப தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். நடிகை லாவண்யா, நடிகர் சரத்குமார் ‘சூரிய வம்சம்’ திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்து பிரபலமானார். இதை தொடர்ந்து, விஜய் நடித்த பத்ரி, கமல் ஹாசன் நடித்த தெனாலி, ரஜினிகாந்த் நடித்த படையப்பா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பல திரைப்படங்களிலும் நடித்தும், அழுத்தமான கதாபாத்திரம் கிடைக்காததால் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க துவங்கினார். அந்த வகையில் தற்போது நடிகர் லிவிங்ஸ்டன் மகள் நாயகியாக நடித்து வரும் அருவி சீரியலில் லட்சுமி என்கிற

மொட்டை ராஜேந்திரன் ரீல்ல எப்படியோ அப்படித்தான் ரியல்லேயும்!' லாவண்யா

வேடத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை லாவண்யா பிரசன்னா என்பவரை திருப்பதியில் திருமணம் செய்து இருக்கிறார். இவருடைய திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது லாவண்யா பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் படையப்பா திரைப்படத்தில் நாசரின் மனைவியாக இவர் நடித்ததை மறக்க முடியாது என்றும் இவருடைய புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலர் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!