தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18.4.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகத்தின் (டெக்ஸ்கோ) 2021-2022ம் நிதியாண்டிற்கான சமூக மேலாண்மை பொறுப்பு நிதியிலிருந்து 43 இலட்சத்து 735 ரூபாய்க்கான காசோலையை “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” (நம்ம ஊர் பள்ளி) திட்டத்திற்கு பொதுத்துறை செயலாளர் முனைவர் டி. ஜகந்நாதன் வழங்கினார். இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு சிறப்புச் செயலாளர் வ. கலைஅரசி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.