Skip to content
Home » விஜய் அரசியலுக்கு வந்து என்ன செய்கிறார் என பார்த்துவிட்டு கைகொடுப்பேன்.. நடிகை திவ்யா கிருஷ்ணன்

விஜய் அரசியலுக்கு வந்து என்ன செய்கிறார் என பார்த்துவிட்டு கைகொடுப்பேன்.. நடிகை திவ்யா கிருஷ்ணன்

தமிழ் திரைத்துறையிலும், சின்னத்திரையிலும் நடிகைகளுக்கான பாலியல் தொந்தரவு இருக்கத்தான் செய்கிறது.

பாலியல் தொந்தரவு விவகாரம் வளர்ந்த நடிகைகளுக்கு பிரச்சனையில்லை, ஆனால் வளரும் நடிகைகளுக்கு பிரச்சனையாக இருக்கிறது, நடிகைகள் பாதுகாப்பு தொடர்பான விசாரணை கமிட்டி தமிழகத்திலும் அமைக்க வேண்டும் – நடிகை திவ்யா கிருஷ்ணன் பேட்டி.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து என்ன செய்கிறார் என பார்த்துவிட்டு கைகொடுப்பேன் – திவ்யாகிருஷ்ணன் பேட்டி.

திரைப்பட நடிகையும், சின்னத்திரை நடிகையுமான திவ்யா கிருஷ்ணன் மற்றும் வேணுகோபால் ஆகியோர் இணைந்து DV STUDIO தயாரிப்பில் வினோத் என்ற புதிய இயக்குனரின் இயக்கத்தில் நடிகை திவ்யாகிருஷ்ணன் மற்றும் நடிகை சுமதி ஆகியோர் நடிப்பில் வெளியாகவுள்ள கானல் திரைப்படத்தின் தொடக்கவிழா பூஜை மதுரையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

இதில் ஏராளமான துணை நடிகை, நடிகர்கள் கலந்துகொண்டனர். திரைப்படத்தின் தொடக்கமாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சினிமாவிற்கான பணி தொடங்கியது. இதில் நடிகைகள் திவ்யா மற்றும் சுமதி மற்றும் இயக்குனர் வினோத் உள்ளிட்டோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி பூஜையை தொடங்கிவைத்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை திவ்யா கிருஷ்ணன் பேசுகையில்..

இதுவரை படத்தின் நடித்துள்ளேன் முதல் முறையாக தயாரிப்பாளரானது மகிழ்ச்சியாக அளிக்கிறது சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் முதலில் தொடங்குகிறோம் என்பது மகிழ்ச்சியாகவுள்ளது மதுரையில் தொடங்கும் அனைத்தும் வெற்றி தான் அதில் மாற்றுக் கருத்து இல்லை அதனால் நிச்சயம் எங்கள் படம் வெற்றி பெறும், நடிகையாக இருப்பது எளிது ஆனால் தயாரிப்பாளராக இருப்பது கடினமானது

இப்ப நிறைய சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றி பெறுகிறது பெரிய பட்ஜெட் படங்களில் பெரிய ஹீரோக்கள் நடிக்கிறார்கள் அதுவும் சரியாக போகாமல் இருக்கிறது ரசிகர்கள் தற்போது நல்ல கதை, நன்றாக ரசிப்பது போல இருந்தால் வெற்றி பெற வைக்கிறார்கள்

தமிழ்சினிமாவில் ஹீரோயின்களுக்கான பாலியல்தொந்தரவு உள்ளதா என்ற கேள்விக்கு?

அனைத்து துறையிலும் எல்லா விஷயங்களும் நடந்து வருகிறது திரையுலகில் பிரபலமாக இருப்பதால் பிரபலமாக தெரிகிறது, தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கான பாலியல் தொந்தரவு இருக்கத்தான் செய்கிறது,. இருக்கு ஆனால் இல்லை என்பதுபோல இலைமறைக்காயாக உள்ளது சின்னத்திரையிலும் சினிமாவிலும் பாலியல்

தொந்தரவு இருக்கிறது , அவரவர்களுக்கு நிகழும் போது தான் அது வெளியில் வருகிறது ,

கேரளா அளவிற்கு இங்கு இல்லை அவர்களுடைய கலாச்சாரம் வேற தமிழர்களின் கலாச்சாரம் வேற அதோட ஒப்பிடும் போது அந்த அளவிற்கு இங்கு இல்லை.

சினிமா துறையில் பாலியல் ரீதியான பிரச்சனைகளை விசாரணை நடத்த தனி கமிட்டி வேண்டும் வளர்ந்தவர்களுக்கு பிரச்சனை இல்லை வளர உள்ளவர்களுக்கு பிரச்சனை உள்ளது

தெரியாதவர்கள் மாட்டிக் கொண்டவர்கள் சொல்வதற்கு நல்ல வழி நிச்சயமாக கமிட்டி அமைக்கலாம

விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு?

யார் நல்லது செய்தாலும் சப்போர்ட் பண்ணலாம், விஜய் அரசியலுக்கு வந்து அவர் என்ன செய்யப் போகிறார் என பார்த்துவிட்டு சப்போர்ட் பண்ணலாமா வேண்டாமா என கூறுகிறேன், யார் நல்லது செய்தாலும் அவர்களுக்கு கை கொடுப்பது நல்லது தவறு கிடையாது என்றார்.

நடிகை சுமதி பேசியபோது :

முதல் முறையாக ஹீரோயினாக படம் நடிக்கிறேன் ஏற்கனவே முதல் படம் நடித்துள்ளேன் அது இன்னும் ரிலீஸ் ஆகவில்லை இதுதான் எனது முழு படமாக உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது எனது
பாலோவர்களுக்கு இந்த படம் பெரிய ட்ரீட்டாக இருக்கும் எங்கள மாதிரியான ஆட்களுக்கு ஹீரோயின் வாய்ப்பு கொடுத்த இயக்குனர்களுக்கு நன்றி.

கேரள மாநிலத்தில் இருந்து ஹீரோயின் வருகிறார்கள் தமிழகத்திலிருந்து எங்களை போன்றவர்களை ஹீரோயினாக தேர்வு செய்வது மகிழ்ச்சியளிக்கிறது மதுரையில் இருந்து ஹீரோயின் வருவது பெரிய விஷயம் என்றார்.

இயக்குனர் வினோத் பேசியபோது : இது எனது இரண்டாவது திரைப்படம் மதுரையில் கிராமம் சார்ந்த கதையாக அமையும் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!