தமிழ்நாடும், தமிழ் மக்களும் தான் முக்கியம் என்னால் தமிழக நிறுவனம் பாதிக்கபடும் என்றால் அந்த விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறி ரூ.1 கோடி கொடுத்தும் கொக்ககோலா விளம்பரத்தில் நடிக்க மறுத்து அவர்களை திருப்பி அனுப்பி வைத்தவர் விஜயகாந்த். அந்த கால கட்டத்தில் ரூ.1 கோடி என்பது இன்றைய கால கட்டத்தில் கிட்டத்தட்ட ரூ.30 கோடி. ஆனால் விஜயகாந்த் அந்த நிறுவனத்திடம் ஒரு கேள்வி கேட்டார்.அதாவது,நான் உங்கள் கொக்ககோலா விளம்பரத்தில் நடித்தால் உண்மையிலேயே என் ரசிகர்கள் அனைவரும் வாங்குவார்கள். என் முகத்திற்காக பொதுமக்கள் அனைவரும் உங்கள் கொக்ககோலா குளிர்பானத்தை வாங்கி அருந்துவார்கள். இதனால் பாதிக்கப்பட போவது என் தமிழ் மக்கள் தான். ஏன் என்றால் என் தமிழகத்தில் சிறு சிறு குளிர்பான நிறுவனங்கள் பல உள்ளது. நான் உங்கள் கொக்ககோலா நிறுவனம் கொடுக்கும் பணத்திற்காக நடித்தால் தமிழகத்தில் உள்ள சிறிய குளிர்பான நிறுவனங்கள் பாதிக்கப்படும். அதனால் எனக்கு பணம் முக்கியம் இல்லை. எனக்கு தமிழ்நாடும், தமிழ் மக்களும் தான் முக்கியம். என்னால் தமிழக நிறுவனம் பாதிக்கப்படும் என்றால் அந்த விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன். அப்படியொரு பணம் எனக்கு தேவையில்லை என கொக்ககோலா நிறுவனத்தினரை திருப்பி அனுப்பிவைத்தார் விஜயகாந்த்.
தமிழ்நாடும், தமிழ் மக்களும் தான் எனக்கு முக்கியம்…. ரூ.1 கோடியை உதறிய விஜயகாந்த்
- by Authour
