தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், 2021 முதல் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தலிபான் ஆட்சிக்காலத்தில் கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்பற்றி, அங்குள்ள அறநெறி அமைச்சகத்தின் திட்டமிடல் மற்றும் சட்டமாக்கல் பிரிவு இயக்குனர் மோஹிபுல்லா மோஹாலிஸ் நேற்று கூறியதாவது..இஸ்லாமிய சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட 13,000க்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர 21,328 இசைக்கருவிகள் அழிக்கப்பட்டன. ஒழுக்கநெறி தவறிய திரைப்பட ‘சிடி’ க்களை சந்தையில் விற்பனை செய்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமிய சட்டத்திற்கு உட்பட்டு தாடி வளர்க்காத 281 வீரர்கள், பாதுகாப்புப் படையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.