கடந்த ஐபிஎல் சீசனின் போது ரசிகர்களுக்காகவே நீண்ட ஹேர்ஸ்டைலுடன் தோனி களமிறங்கியது அவரது ரசிகர்கள் பலருக்கும் சந்தோசத்தை கொடுத்தது. அதற்குக் காரணம் தோனி தனது சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான போது அந்த நீண்ட ஹேர்ஸ்டைலுடன் தான் அறிமுகமானார்.
அதனால், கடந்த ஐபிஎல் தொடரில் ரசிகர்களுக்காக மீண்டும் அந்த ஹேர்ஸ்டைலுடன் அவர் விளையாடினார். மேலும், அதே ஹேர்ஸ்டைலுடன் தான் கிட்ட தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தோனி இருந்து வந்தார். தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது முதலே விளம்பரங்களுக்காகவும், புது மாற்றத்திற்காகவும் பல பல ஹேர்ஸ்டைலை ரசிகர்களிடையே அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
இதைக் காணும் அவரது ரசிகர்களும் அவரைப் போன்ற ஹேர்ஸ்டைலை வைத்து ட்ரெண்ட் ஆக்கி வருவார்கள். இந்த நிலையில், ஒன்றரை வருடங்கள் நீண்ட ஹேர்ஸ்டைலுடன் இருந்த தோனி தனது ஹேர்ஸ்டைலை தற்போது மாற்றி இருக்கிறார்.
தனது பிரத்யேக ஹேர் ஸ்டைலிஸ்டான “ஆலிம் ஹக்கிமிடம்” முடியை திருத்தி கொண்டுள்ள தோனி, ஹாலிவுட் ஹீரோக்களுக்கே சவால்விடும் வகையில் தற்போது மாறியுள்ளார். நீண்ட முடியை திருத்தி கொண்டுள்ள தோனியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.