நடிகர் கமல்ஹாசன், ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’. த்ரிஷா, அபிராமி, கவுதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடிக்கிறார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன. இதில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கால்ஷீட் பிரச்சினை காரணமாக விலகினர். இதையடுத்து, ஒரு கேரக்டரில் சிம்பு நடிக்கிறார். மற்றொரு கேரக்டரில் அருண் விஜய் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.
அண்மையில் சமூக வலைதளங்களில் ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று லீக் ஆனது. அதில் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, நாசர், வையாபுரி ஆகியோர் இடம்பெற்றனர். இதன் மூலம் சிம்பு நடிப்பது உறுதியாகிவிட்டதாக நெட்டிசன்கள் கூறிவந்தனர்.