Skip to content

மகன் பிறந்த நாள்

மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய அட்லீ….

தெரி, மெர்சல், பிகில் என சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குநர் வரிசையில் இணைந்தவர் அட்லீ. அவர் தற்பொழுது பாலிவுட் பக்கம் சென்று, அங்கு ஷாருக்கனை வைத்து ‘ஜவான்’ படத்தி இயக்கி வருகிறார். இவர் இயக்கம் மட்டுமல்லாமல் தனது மானைவியுடன் இணைந்து ‘A for Apple Productions’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி  தயாரிப்பாளராக சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளனர். இதற்கு முன் கோலிவுட்டில் சிங்கம், நான் மகான் அல்ல உல்ளிட்ட சில படங்களில் நடித்தவர் பிரியா அட்லீ. திருமணத்திற்கு பின் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். இதையடுத்து, அட்லீ பிரியா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில், அட்லீ மற்றும் பிரியா தம்பதி, மகன் மீரின் முதல் பிறந்தநாளை டிஸ்னிலேண்டில் கொண்டாடி உள்ளார்.

error: Content is protected !!