Skip to content

குகேஷ்

குகேஷ்க்கு கேல் ரத்னா விருது- ஜனாதிபதி வழங்கினார்

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உயரிய கேல் ரத்னா விருதுக்கான பட்டியலில் பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப்பதக்கம் வென்று வரலாறு படைத்த அரியானா வீராங்கனை மனு பாக்கர், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை இளம் வயதில் சொந்தமாக்கி சரித்திரம் படைத்த தமிழக வீரர் குகேஷ், ஒலிம்பிக் ஆக்கியில் இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக வெண்கலம் வென்றதில் முக்கிய பங்கு வகித்த கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கபதக்கம் பெற்ற  உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரவீன்குமார் ஆகிய 4 பேர் இடம் பெற்றிருந்தனர்.

கேல் ரத்னா விருதுக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டு பட்டயமும் வழங்கப்படும்.

இதற்கான விருது வழங்கும் விழா இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி  திரவுபதி முர்மு விருதுகளை  வழங்கினார்.  உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு கேல் ரத்னா விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார். அத்துடன் அவருக்கு பாராட்டு பட்டயமும் வழங்கினாா். அதுபோல மனு பாக்கர், ஹர்மன்பிரீத் சிங் மற்றும் பிரவீன்குமார் ஆகியோருக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு கேல் ரத்னா விருது வழங்கினார்.


Read More »குகேஷ்க்கு கேல் ரத்னா விருது- ஜனாதிபதி வழங்கினார்

உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் சந்தித்து பாராட்டிய ரஜினி…

  • by Authour

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரெனை வீழ்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் 18 வயதேயான குகேஷ் இள வயது… Read More »உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் சந்தித்து பாராட்டிய ரஜினி…

உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு இன்று பாராட்டு விழா, முதல்வா் பங்கேற்பு

  • by Authour

இளம் வயதிலேேயே உலக செஸ் சாம்பியன்  பட்டத்தை வென்றார் தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ். அவரது சாதனையை  பாராட்டி தமிழ்நாடு அரசு சார்பில் இன்று  விழா நடத்தப்படுகிறது.. மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில்… Read More »உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு இன்று பாராட்டு விழா, முதல்வா் பங்கேற்பு

செஸ் உலக சாம்பியன் குகேஷ்க்கு….. சென்னையில் வரவேற்பு

  • by Authour

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இளம் வயதில் உலக சாம்பியன் ஆன வீரர் என்ற வரலாற்று சாதனையையும் இவர்… Read More »செஸ் உலக சாம்பியன் குகேஷ்க்கு….. சென்னையில் வரவேற்பு

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக முன்னேறினார் குகேஷ்….

சர்வதேச செஸ் சம்மேளனத்தின் (பிடே) சார்பாக ஒவ்வொரு மாதமும் அதிகாரப்பூர்வ ரேட்டிங் பட்டியல் வெளியிடப்படும். இந்த ரேட்டிங் பட்டியலில் கடந்த 37 ஆண்டுகளாக விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவின் நம்பர் 1 வீரராக இருந்தார்.  இந்நிலையில்… Read More »இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக முன்னேறினார் குகேஷ்….

error: Content is protected !!