திருச்சி மாவட்டம், முசிறி எம் ஐ டி கல்லூரி வளாகத்தில் முதலாம் தகுதி நிர்ணய டேபிள் டென்னிஸ் போட்டிகளை எம்ஐடி கல்வி நிறுவனங்களும் திருச்சி மாவட்ட மேஜை பந்து வளர்ச்சி கழகமும் நடத்தினர். இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு எம் ஐ டி கல்லூரிகளின் ஆலோசகர் கௌரி ராவ் பரிசுகளை வழங்கினார்.
பெண்கள் பிரிவில் மினிகேடட் பிரிவில் ஹீபர்டேபிள் டென்னிஸ் அகாடமியை சேர்ந்த அலினா எலின், கேடட், சப் ஜூனியர், ஜூனியர், யூத் மற்றும் பெண்கள் பிரிவில் ஐ பி டி டி ஏ அணியைச் சேர்ந்த விபா வெற்றி பெற்றனர் ஆண்கள் மினி கேடட் பிரிவில் ஹீபர் டேபிள் டென்னிஸ் அகாடமியை சேர்ந்த சர்வஜித் ,கேடட், சப் ஜூனியர், ஜூனியர், யூத் ஆகிய பிரிவுகளில் ஐபிடிடிஏ அணியைச் சேர்ந்த வைபவ் , நான் மெடலிஸ்ட் ஒற்றையர் போட்டியில் ஜமால் முகமது கல்லூரியை சேர்ந்த நிஷாந்த், வெட்ரன்ஸ் ஒற்றையர் போட்டியில் ரயில்வே இன்ஸ்டியூட் சேர்ந்த மோகன், இரட்டையர் போட்டியில் ஜமால் முகமது கல்லூரியைச் சேர்ந்த கிஷோர் குமார் மற்றும் நிஷாந்த் ஜோடியும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஹீபர் டேபிள் டென்னிஸ் அகாடமியை சேர்ந்த முரளிமனோகர் ஆகியோர் வெற்றி பெற்றனர். பெண்கள் பிரிவில் ஐந்து பட்டம் வெற்றி பெற்ற விபா, ஆண்கள் பிரிவில் 4 பட்டம் வென்ற வைபவ் இருவரும் இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிகளை சர்வதேச நடுவர் பிரியதர்ஷினி இந்திய நடுவர் நரேஷ் குமார் ஆகியோர் நடத்தினர் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செயலாளர் சுகுமாரன் செய்திருந்தார் இறுதியில் மேஜை பந்து கழக தலைவர் மேஜர் பொன்னுரத்தினம் நன்றி கூறினார்.