Skip to content
Home » டி20….. தொடரை வென்ற மேற்கு இந்திய தீவு….9 வருடத்திற்கு பின் இந்தியா மோசமான தோல்வி

டி20….. தொடரை வென்ற மேற்கு இந்திய தீவு….9 வருடத்திற்கு பின் இந்தியா மோசமான தோல்வி

வெஸ்ட் இண்டீசுக்கு  எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாமல் ஹர்டிக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு போட்டிகளில் 2016க்குப்பின் முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை சந்தித்தது . இருப்பினும் அதற்கடுத்த 2 போட்டிகளில் போராடி வென்ற இந்தியா,  தொடரை சமன் செய்தது. ஆகஸ்ட் 13ம் தேதி அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில்  மேற்கு இந்திய தீவு , டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய யசஸ்வி ஜெய்ஸ்வால் 5 (4) ரன்களிலும் சுப்மன் கில் 9 (9) ரன்களிலும் ஆட்டமிழக்க இந்திய 17/2 என்ற தடுமாற்று துவக்கத்தை பெற்றது. ஆனாலும் பின்னர் களமிறங்கிய திலக் வர்மா மற்றும் சூரிய குமார் யாதவ் இருவரும் சிறப்பாக செயல்பாட்டு இந்தியாவிற்கு நல்ல ஸ்கோரை கொண்டுவர முயற்சி செய்தார்கள். ஆனால் திலக் வர்மா 27 (18) ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த சஞ்சு சாம்சன் பொறுப்பின்றி 13 (10) ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் தடுமாறி 14 ரன்களில் அவுட்டாக தனி ஆளாகி போராடிய சூரியகுமார் 61 ரன்களை குவித்தார். ஆனாலும் அவரும் பின்னர் ஆட்டமிழந்த நிலையில் இறுதியில் அக்சர் படேல் 13 (10) ரன்கள் எடுத்த போதிலும் 20 ஓவர்களில் இந்தியா 165/9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ரொமாரியா செஃபார்ட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதனால் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிரடி துவக்கிய கெய்ல் மேயர்ஸ் 10 (6) ரன்களில் அவுட்டாகி சென்றாலும் அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் நிக்கோலஸ் பூரான் வழக்கம் போல சரமாரியாக அடித்து நொறுக்கினார். ப்ரெண்டன் கிங் 5 பவுண்டரி 6 சிக்ஸருடன் 85* (55) ரன்களும் ஷாய் ஹோப் 22* (13) ரன்களும் எடுத்ததால்18 ஓவரிலேயே 171 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 3 – 2 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி டி20 கிரிக்கெட்டில் இன்னமும் தாங்கள் விழவில்லை என்று கோப்பையை வென்றது. இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது இந்தியாவின் பந்து வீச்சு தான். ஏனென்றால் 160+ ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் தான் பந்துவீக்காளர்கள் முதலியிலே விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தால் இந்தியா வெற்றி பெற வாய்ப்பு கிடைத்திருக்கும்.

மறுபுறம் இந்த தோல்வியினால் இந்தியா கடந்த 2016ல் தோனி தலைமையில் 1 – 0 (2) என்ற கணக்கில் தோற்ற இந்தியா 9 வருடங்கள் கழித்து டி20 கிரிக்கெட்டில் தோற்றது மட்டுமல்லாமல். 2006க்குப்பின் 17 வருடங்கள் கழித்து முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் எதிராக ஒரு 5 போட்டிகள் கொண்ட தொடரில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *