டி 20 உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடக்கிறது. 1ம் தேதி போட்டி தொடங்கியது. நேற்று வரை 11 ஆட்டங்கள் நடந்துள்ளது.
டல்லாஸ் நகரில் நேற்று நடந்த ஆட்டத்தில் அமெரிக்கா- பாகிஸ்தான் அணிகள் மோதின. பாகிஸ்தான் பலமான அணி, அமெரிகாவை ஊதித்தள்ளிவிடும் என கிரிக்கெட் ரசிர்கள், இந்திய மக்களவை தேர்தல் கருத்து கணிப்பு போல கணித்தனர்.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. 160 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய அமெரிக்கா 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்து சூப்பர் ஓவருக்கு ஆட்டத்தைக் கொண்டு சென்றது.
சூப்பர் ஓவரில் அனுபவம் வாய்ந்த அணிபோல் செயல்பட்ட அமெரிக்கா அணி ஒரு ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 18 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் சேர்த்து 5 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர பாகிஸ்தான் வீரர்களுக்கு வெகுநேரம் பிடித்தது.
இந்த வெற்றியின் மூலம் குரூப் ஏ பிரிவில் அமெரிக்கா அணி 2 போட்டிகளில் 2வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. அடுத்ததாக அயர்லாந்து அணியை மட்டும் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வென்றுவிட்டால் சூப்பர்-8 சுற்றுக்குள் அமெரிக்கா செல்வதற்கு வாய்ப்புள்ளது.
இந்த வெற்றி குறித்து அமெரிக்க அணியின் கேப்டன் மோனக் படேல் கூறியதாவது: “பாகிஸ்தானை வீழ்த்தியது மிகப்பெரிய சாதனை. முதல்முறையாக அந்த அணியுடன் மோதி வெற்றி பெற்றோம். சூழலை நன்கு பயன்படுத்திக்கொண்டு 160 ரன்களுக்குள் சுருட்டினோம். எங்களாலும் அந்த ரன்களை எட்ட முடிந்தது, என்னுடைய பங்களிப்பும், அணியின் பங்களிப்பும் மகிழ்ச்சியளிக்கிறது.”
உலகக் கோப்பையில் இதுபோன்ற வாய்ப்பு ஒவ்வொரு ஆட்டத்திலும் கிடைக்காது.“பாகிஸ்தானுக்கு எதிராக ஒவ்வொரு பந்தையும் அர்ப்பணிப்புடன் வீச வேண்டும் என்று திட்டமிட்டோம், அணியின் ஒட்டுமொத்த உழைப்பால்தான் வெற்றி சாத்தியமானது”
இவ்வாறு அவர் கூறினார்.
பாகிஸ்தான் அணி தனது முதல் லீக் ஆட்டத்திலேயே அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்துள்ளதால் அந்த அணிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்திய அணியுடன் ஒரு ஆட்டம், கனடா, அயர்லாந்து ஆகிய அணிகளுடனான ஆட்டங்களில் கட்டாயம் வென்றால்தான் சூப்பர்-8 சுற்றுக்குள் செல்ல முடியும்.
அமெரிக்கா தனது 3-ஆவது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை வெல்லாமல் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் பாகிஸ்தான் அணி சூப்பர்-8 சுற்றுக்குச் செல்ல வாய்ப்புள்ளது.
ஒருவேளை அயர்லாந்து அணியை அமெரிக்கா வென்றுவிட்டால் 6 புள்ளிகளுடன் நிற்கும். பாகிஸ்தான் அணி தனது மீதமிருக்கும் 3 ஆட்டங்களிலும் கண்டிப்பாக வெல்ல வேண்டும். இல்லாவிட்டால், லீக் சுற்றோடு வெளியேற வேண்டியிருக்கும்.
அமெரிக்க அணியின் கேப்டன் மோனக் படேல் கூறுகையில் “பாகிஸ்தானை வீழ்த்தியது மிகப்பெரிய சாதனை. முதல்முறையாக அந்த அணியுடன் மோதி வெற்றி பெற்றோம். சூழலை நன்கு பயன்படுத்திக்கொண்டு 160 ரன்களுக்குள் சுருட்டினோம். எங்களாலும் அந்த ரன்களை எட்ட முடிந்தது, என்னுடைய பங்களிப்பும், அணியின் பங்களிப்பும் மகிழ்ச்சியளிக்கிறது.”
உலகக் கோப்பையில் இதுபோன்ற வாய்ப்பு ஒவ்வொரு ஆட்டத்திலும் கிடைக்காது எனக் கூறிய மோனக் படேல், “பாகிஸ்தானுக்கு எதிராக ஒவ்வொரு பந்தையும் அர்ப்பணிப்புடன் வீச வேண்டும் என்று திட்டமிட்டோம், அணியின் ஒட்டுமொத்த உழைப்பால்தான் வெற்றி சாத்தியமானது” எனத் தெரிவித்தார்
.அமெரிக்க அணி(யுஎஸ்ஏ) சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்த சில ஆண்டுகளில் பெற்ற மிகப்பெரிய வரலாற்று வெற்றி இதுவாகத்தான் இருக்க முடியும். பாகிஸ்தானின் பேட்டர்களை தங்கள் பந்துவீச்சால் திணற வைத்து, பந்துவீச்சாளர்களுக்கும் சவாலாக இருந்த அமெரிக்க அணி திறன்மிக்க அணியாகத் தன்னை வெளிப்படுத்தியுள்ளது.
.