Skip to content
Home » இலங்கையுடன் 2வது டி20….இந்தியா தோல்வி

இலங்கையுடன் 2வது டி20….இந்தியா தோல்வி

இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி புனேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹர்தி பாண்ட்யா பந்துவீச்சை தேர்வுசெய்தார். இதில் முதல் போட்டியில் பங்கேற்காத அர்ஷ்தீப் சிங், இந்த போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெற்றார். டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்திய அவர், கடைசி கட்ட ஓவர்களையும் அற்புதமாக வீசும் திறம் பெற்று வந்தார். இதனால் இந்திய டி20 அணிக்கு முக்கிய பந்துவீச்சாளராக திகழ்வார் என அனைவராலும் பேசப்பட்டு வந்தார். பந்துவீச்சில் பல்வேறு திறமைகளை கொண்ட அவர், இலங்கைக்கு எதிரான  போட்டியில் செய்ததோ வேறு. இலங்கைக்கு எதிரான போட்டியின் இரண்டாவது ஓவரை வீச வந்த அவர், ஒரே ஓவரில் 3 நோ பால்களை வீசினார். அத்துடன் அந்த ஓவரில் மட்டும் 19 ரன்களை வழங்கினார். இதனால், அவர் மீது நம்பிக்கை இழந்தது போல் கானப்பட்ட கேப்டன் பாண்ட்யா, அவருக்கு 4 ஓவர்களையும் வீசுவதற்கு வாய்ப்பு வழங்கவில்லை. இறுதியில் 19வது ஓவரை வீச வந்த அர்ஷ்தீப் சிங், அந்த ஓவரிலும், 2 நோ பால்களை வீசினார். அத்துடன், 18 ரன்களையும் வாரி வழங்கினார். இரண்டே ஓவர்களை வீசி 5 நோ பால்களுடன் 37 ரன்களை எதிரணிக்கு வாரி வழங்கிய அர்ஷ்தீப் சிங்கை பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இலங்கையுடனான முதல் போட்டியிலும்  பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ததில் கேப்டன் செய்த தவறு காரணமாகவே அந்த போட்டியில் இந்தியா 2 ரன்னில் மயிரிழையில் தோல்வியை தவிர்த்தது. இப்போதும் பாண்ட்யா,  செய்த தவறே தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். அர்ஷ்தீப்பை தவிர்த்திருந்தால் இந்தியா இந்த முறையும் வெற்றி பெற்றிருக்கும்.  2வது ஓவரில் 3 நோ பால் வீசிய அர்ஷ்தீபுக்கு முக்கியமான கட்டத்தில் 19வது ஓவரையும் வீச  கேப்டன் வாய்ப்பளித்தார். அந்த ஓவரிலும் 2 நோ பால் வீசி 18 ரன்களை வாரி கொடுத்தார். இதுவே இந்திய அணி தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது.

முதலில் ஆடிய இலங்கை 6 விக்கெட் இழப்புக்கு  206 ரன்களை குவித்தது.    2வதாக ஆடிய இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை சேர்த்தது. சூர்யகுமார் 51 ரன்களையும்,     அக்சர்பட்டேல் 65 ரன்களையும் சேர்த்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *