ஐஐசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்தியா அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன் ) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் ஜடேஜா, அக்சர் படேல். குல்தீப், சஹல், ஹர்ஷ்தீப் சிங், பும்ரா, சிராஜ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். சென்னை அணியில் சிறப்பாக விளையாடி வரும் ஷிவம் தூபேவிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ரிங்கு சிங், சுப்மன் கில், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக பிசிசிஐ அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழக வீரர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. ஜூன் 4ம் தேதியில் இருந்து ஜூன் 30 வரைக்கும் வெஸ்ட் இண்டீஸ் அமெரிக்காவில் 10 மைதானங்களில் உலககோப்பை டி20 போட்டி நடைபெறுகிறது.