டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்காவை வெற்றி பெற்று இந்தியா கோப்பையை வென்றது. இந்தபோட்டிகளில் விளையாடிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் தனது ஒய்வை அறிவித்துள்ளார். இன்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருநது ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உலக கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் டி20 போட்டிகளி்ல் இருந்து ஒய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ள 3வது வீரர் ஜடேஜா என்பது குறிப்பிடதக்கது.