அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் கேசவன் மஹாலில், திமுகத் தலைவர் உத்தரவின்படி, தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், ஒன்றிய கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது, ஒன்றிய அவைத்தலைவர் எஸ்.சூசைராஜ் தலைமை தாங்கினார். தா.பழூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட கழக செயலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கழக சட்டத்திட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்வில் பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் இரா.அண்ணாதுரை, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி
அமைப்பாளர் என்.ஆர்.இராமதுரை, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கே.சி.லூயிகதிரவன், ஒன்றிய துணை செயலாளர்கள் க.சாமிதுரை, இந்துமதி நடராஜன், ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் கோவி.சீனிவாசன், சி.கண்ணதாசன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் இரா.சங்கர், ந.கார்த்திகைகுமரன், சம்பந்தம், த.குணசீலன், வெ.பாலசுப்ரமணியன், தங்க.பிரகாசம், முனைவர் முருகானந்தம், க.நளராசன், மருத்துவர் மா.சங்கர், எழிலரசி அர்ச்சுனன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் இரா.கோகுல கண்ணன், தா.பழூர் நகர செயலாளர் கண்ணன் மற்றும் மற்றும் கிளை கழக செயலாளர்கள், கழகத் தோழர்கள், மக்கள் பிரதிநிதிகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர். நிறைவாக ஒன்றிய பொருளாளர் த.நாகராஜன் நன்றி கூறினார்.