திருச்சி, ராம்ஜி நகர் அருகே உள்ள கள்ளிக்குடியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுதர்சன் (26) என்பவர் இசைப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கினார். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறினார் . மேலும் இது குறித்து ராம்ஜி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் விசாரணை செய்து வருகின்றனர்.
