பாரதிய ஜனதா கட்சித்தலைவர் நட்டா, நி்தி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு, அல்லது ஆந்திராவில் மக்களவை தேர்தலில் போட்டியிடும்படி கூறினார். இதற்காக அவருக்கு 10 நாள் அவகாசமும் கொடுத்தார். ஆனால் நிர்மலா போட்டியிடவில்லை என கூறிவிட்டார். இது குறித்து நிர்மலா அளித்த பேட்டியில், தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்று கூறியிருந்தார்.
இந்த பேட்டி குறித்து பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி கூறியதாவது:
நிர்மலா சீதாராமன், தேர்தலில் போட்டியிட மோடியிடம் பணம் கேட்டிருக்க வேண்டும். பணம் இல்லை எனக்கூறும் நிர்மலா சீதாராமன் , 2022-23 , 2004-05வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்திருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் தேர்தலில் போட்டியிடாததற்கான உண்மையான காரணத்தை அவர் கூறியிருக்க வேண்டும் .
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.