பெண் பத்திரிகையாளர் குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிட்ட விவகாரத்தில் தனக்கு வழங்கப்பட சிறை தண்டனையை எதிர்த்து எஸ்.வி.சேகர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் எஸ்.வி.சேகர் சரணடையும் அவகாசம் என்பதை ஜூலை மாதம் வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் மறுஉத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவாகரத்தில் சம்மந்தப்பட்ட பெண் பத்திரிக்கையாளரிடம் நேரடியாகவே தான் மன்னிப்பு கோருவதற்கு தயாராக உள்ளதாக அவர் கூறியதை ஏற்று இந்த உத்தரவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இது தொடர்புடைய பெண் பத்திரிகையாளரை இந்த வழக்கில் எதிர் மனுதாரராக இணைத்தும் தற்போது உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.