சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்டங்கள் வாரியாக அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் ஆளுநர் ஆர்என் ரவி குறித்து அவதூறாகவும், கொச்சையாகவும் பேசினார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு ஆளுநர் மாளிகை தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
சிவாஜி கிருஷ்ண மூர்த்தி பேச்சுக்கு, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்திருந்தார். சிவாஜி கிருஷ்ண மூர்த்தியின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த நிலையில், திமுகவில் இருந்து தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.